Published on 25/08/2022 | Edited on 25/08/2022

கரூரில் காட்டெருமை ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
கரூர் மாவட்டம் மூலிமங்கலம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் திடீரென்று காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், ஊருக்குள் காட்டெருமை புகுந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. அதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே அச்சத்தில் உறைந்தனர். அதன் பிறகு இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டெருமையை வனப் பகுதிக்குள் துரத்திவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.