Advertisment

புற்றுநோயாளிகளுக்கு விக்... சிகை தானாம் செய்த கல்லூரி மாணவிகள்

கோவைபி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்கு "விக்" செய்வதற்காக முடி தானம் செய்யும் நிகழ்வு நேற்றுநடைபெற்றது. இதில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பேராசிரியைகள், ஊழியர்கள் ஆகியோர் முடிதானம் செய்து வருகின்றனர்.

Advertisment

Wig for cancer patients ... college students who donate their hair

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடம்ஏற்படுத்தும் விதமாகவும், பெருநிறுவனங்கள் மத்தியில் முடிதானம் குறித்து விழிப்புணர்வை கொண்டு செல்லும் விதமாகவும் இந்த நிகழ்ச்சியானது தனியார் நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முடிதானம் செய்து வருகின்றனர்.

புற்றுநோய் சிகிச்சையின் போது முடி உதிர்தல் இயல்பாக நடக்கும் என்றாலும், அது நோயாளிகளை பாதிக்கும். இந்நிலையில் தானமாக பெறப்படும் முடியால் செயற்கை கூந்தல்( விக்) தயாரித்து குறைவான விலையில் புற்றுநோயாளிகளுக்க கொடுக்கும் போது அது அவர்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

Advertisment

முடிதானம் அளிக்கும் மாணவிகளிடம் இருந்து10 அங்குலம் மட்டுமே முடி தானமாக வெட்டி எடுக்கப்படுகின்றது.புற்று நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் என்பதால் முடியை தானம் செய்வதாக முடிதானம் செய்த மாணவிகள் தெரிவித்தனர்.

donated College students kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe