Advertisment

70 வயது மூதாட்டிக்கு சொத்துகளை எழுதி வைத்த 90 வயது முதியவர்; ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தஞ்சம்

Wife's claim for recovery of property from husband

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனிஸ்பேட்டையை சேர்ந்தவர் 90 வயது பழனியப்பன். இவரது மனையின் பெயர் பொன்னம்மாள். 82 வயதான பொன்னம்மாள் தனது மகள் கமலாவுடன் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

அதில், கணவர் பழனியப்பனுக்கு 90 வயது என்றும் எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், கணவர் பழனியப்பன் 70 வயதான குப்பாயி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவினை வைத்திருந்தார் என்றும், அதை குடும்பத்தினர் கைவிடச் சொல்லியும் கேட்கவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

Advertisment

தற்போது மூன்றாவதாக பழனியம்மாள் என்ற பெண்ணுடனும் தொடர்பில் உள்ள அவர் எங்களது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார். நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டினையும் இடித்துவிட்டு எங்களை மிரட்டுகிறார் என்றும் அப்புகாரில் கூறியிருந்தனர்.

மேலும், கணவரிடம் இருந்து சொத்தை மீட்டுக் கொடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால், எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என்றும் பொன்னம்மாள் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

selam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe