/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/24_64.jpg)
தனது மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கொலை செய்தவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கல்லை சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் கொத்தனார் செல்வம். 45 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி பிரிந்துவிட்ட நிலையில் செல்வம் அவரது தாய் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கொத்தனார்செல்வம் கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை செல்வத்தின் மூத்த மகன் கபிலன், செல்வம் படுத்திருந்த அறைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது கட்டிலில் ரத்தக் கரைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உடல் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள கிணற்றில் வீசப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர் தனது தந்தையை யாரோ கொன்று கிணற்றில் வீசி இருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து தோகைமலை காவல்துறை மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனன், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர்சென்று தடயங்களை ஆய்வு செய்தனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் தொடர் முயற்சிக்குப் பின் செல்வத்தின் உடல் அன்று மாலை சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தோகைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு சுக்காம்பட்டி குடித்தெருவைச் சேர்ந்த பழனியாண்டி மகன் வெள்ளைச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான வெள்ளைச்சாமியின் மனைவி 35 வயதான ஜெயமணி. வெள்ளைச்சாமி சந்து கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் விசாரணையில், வெள்ளைச்சாமியின் மனைவி ஜெயமணி உடன் கொலை செய்யப்பட்ட செல்வம் பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்ததும், இது தெரிய வந்த பின் ஆத்திரம் அடைந்த வெள்ளைச்சாமி கடந்த 6 ஆம் தேதி சனிக்கிழமை இரவு செல்வத்தை கொலை செய்ததும் தெரிய வந்தது. செல்வம் படுத்திருக்கும் அறைக்குச் சென்று கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வத்தை தாக்கி கொலை செய்து, சடலத்தை அருகாமையில் உள்ள வைரப்பெருமாள் என்பவரது பாசன கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர், வெள்ளைச்சாமியை குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவியல் நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)