/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3795.jpg)
அரியலூரில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் பாலமாடி என்ற பகுதியில் காட்டை ஒட்டிய முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் எழும்பனூரை சேர்ந்த ராணி என்பது தெரிந்தது.
விசாரணை துரிதப்படுத்திய போலீசார் அவருடைய கணவர் மூர்த்தி என்பவரை இது தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கணவர் மூர்த்தியின் செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மொபைல் சிக்னலை வைத்து அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து புதரில் வீசியதாக மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகத்தால் பெண் ஒருவர் கொன்று வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)