Advertisment

கண்ணெதிரே தவறு செய்த மனைவி... அடித்துக் கொன்ற கணவன்

தனது கண் முன்னே, தன்னுடைய மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட கணவன், கோபத்தில் அருகிலிருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவரின் மனைவி உயிரிழந்துள்ளார். உடன் இருந்த நபரோ அங்கிருந்து காயத்துடன் தப்பி ஓடிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

t

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு மனைவி விமலா மற்றும் காவிய ஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி ஞாயிறன்று கிரக பிரவேசத்தினை நடத்தியுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் கணவன் மனைவி குழந்தை 3 பேரும் புதிய வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் தனது குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்த மாரிமுத்து, தனது மனைவியை பார்த்தபோது அவர் காணாமல் இருக்கவே, ஏற்கனவே தங்கி இருந்த பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது தன்னுடைய மனைவி விமலா, அருகிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் இருபது வயது இளைஞர் குமார் என்பருடன் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆத்திரமடைந்து அருகிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். இதில் லேசான காயத்துடன் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் தப்ப முடியாமல் மாட்டிக் கொண்ட விமலாவை, மாரிமுத்து கம்பியால் அடித்துக் கொலை செய்து, தனது ஆத்திரத்தை தீர்த்துள்ளார். ஆத்திரத்தில் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக, தனது உறவினர்களிடம் மாரிமுத்து கண்ணீருடன் தெரிவித்துவிட்டு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்து தன்னுடைய மனைவியைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று அங்கு இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மாரிமுத்தும் விமலாவும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் வேறொருவருடன் தொடர்பு ஏற்பட அது கொலை வரை சென்றிருக்கின்றது. இச்சம்பவத்தால் அனாதை ஆனது என்னவோ அந்த மூன்று வயது பெண்குழந்தைதான்.!

Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe