Advertisment

விபரீத ஆசையால் உயிரிழந்த மனைவி; கொடூர கணவன் கைது

The wife who lost their live due to her husband's perverse desire..The murderer was arrested

கணவனின் விபரீத ஆசையால் மனைவி உயிரிழந்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அத்திக்கோயில் என்ற இடத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த வனராஜ் (50) என்பவர் மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே வனராஜ்க்கு இரண்டு திருமணமமாகிஇருந்த நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த உமா (28) என்ற பெண்ணை மூன்றாவதாக வனராஜ் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அந்த தோட்டத்திலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். உமாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டர் அறையின் மாடியில் வனராஜும் அவரின் மனைவியும் தங்கியுள்ளனர். அடுத்த நாள் காலை பார்த்த உமா உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், கணவர் வனராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையின் பொழுது கணவன் வனராஜன் வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்தனர். வனராஜும் உமாவும் மோட்டார் அறையில் ஒன்றாக அமர்ந்தும் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் உமா மறுப்பு தெரிவிக்க ஆத்திரமடைந்த வனராஜ்அருகில் இருந்தடார்ச்லைட்டை எடுத்துமனைவியை அடித்துக் கொன்றுள்ளார். இதனால் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வன்ராஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

incident police Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe