/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kovai sara.jpg)
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவையில் கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த மனைவி கணவனை அடித்து உதைக்கும் காட்சி சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த புதுமணத் தம்பதியினர். திருமணமாகி 5 நாட்களை ஆன நிலையில், கோவையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது தனது கணவர் கையில் மற்றொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருந்ததை கண்ட மனைவி, யார் பெயர் அது?, ஏன் என் பெயரை பச்சைகுத்தவில்லை என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது, அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருந்ததை மறைத்து, தன்னை திருமணம் செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதானல் ஆத்திரமடைந்த அந்த பெண் கோவிலின் நுழைவாயிலில் வைத்தே கணவரை சரமாறியாக அடித்து உதைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kovaiss.jpg)
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சமாதானம் செய்து, சந்தேகமிருந்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக அந்த பெண்ணிடம் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
சாய்பாபா கோவிலுக்கு தம்பதியினர் இருவரும் தரிசனத்திற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)