wife who incident her husband along with her children

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரிய நெசலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் 33 வயது ஆறுமுகம். இவருடைய மனைவி 30 வயது தீபா. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆறுமுகம் சுமார் பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்துவிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் இருக்கும்போது மனைவிக்கும் அவருக்கும்அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்ததகவல் வேப்பூர் போலீசாருக்கு தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், ஆறுமுகம் மரணம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆறுமுகம் மனைவி தீபா மற்றும் அவரது பிள்ளைகள் சேர்ந்து ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

Advertisment

மேலும், வெளிநாட்டிலிருந்து தனது பிள்ளைகள் நடவடிக்கை குறித்து உறவினர்கள் கூறும் தகவல் அறிந்த ஆறுமுகம் மனைவியை கண்டித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிள்ளைகளை அடித்துத்துன்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி தீபா மகன் மற்றும் மகள் மூவரும் சேர்ந்து சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு அவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தீபா மற்றும்அவரது இரண்டு பிள்ளைகள் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.