Advertisment

Wife who died after hearing the news of her husband's death

திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதியில் வசித்து வந்தவர் பாண்டுரங்கன் (85). தபால் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் தனதுமனைவி சாந்தா (75) உடன் தனியாக வாழ்ந்து வந்தார்.இவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

ஆனால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதைக் கேள்விப்பட்ட மனைவி சாந்தா வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும், அவர்களுடைய உறவினர்களிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியினர், தங்களுடைய பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளதோ என அச்சப்படுவதாகவும், அதனால் அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.