wife who beat her husband for arguing with his wife after drinking

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகில் உள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான தேவராஜ். இவரது மனைவி 34 வயதான பானுமதி.இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். தேவராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

Advertisment

இரண்டு தினங்களுக்கு முன்பு கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான சின்னதகரகுப்பம் வந்துவிட்டார். அங்கும் தேவராஜ் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தெருவில் நின்று தகராறு செய்துள்ளார்.

Advertisment

இதில் ஆத்திரமடைந்த பானுமதி வீட்டுக்கு வெளியே கிடந்த கட்டையால் கணவர் தேவராஜை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பலியானார். மூச்சுப்பேச்சுஇல்லாமல் கிடந்தவர் குறித்துபொதுமக்கள் தந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்த வாலாஜா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.