Wife Welfare Festival in Karur

Advertisment

மனைவி நல வேட்பு விழா கரூரில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் 250 பேர் கலந்துக்கொண்டு கொண்டாடினர்.

கரூர் எல்.ஜி.பி நகர் பகுதியில் உள்ள அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அருட்தந்தை வேதாந்திரி மகரிஷி மனைவி அன்னை லோகாம்பாள்பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ம் தேதி அன்று மனைவி நல வேட்பு நாளாக அறிவித்து, அதனை விழாசெப்டம்பர் மாதம் இறுதி வரை கொண்டாடுவது வழக்கம்.

இல்லற வாழ்வில் இன்ப துன்பங்களை எல்லாம் சரி பாதியாக ஏற்றுக்கொண்டு குடும்பத்திற்காகவும், கணவருக்காகவும் பல தியாகங்களை செய்து வரும் மனைவிகளை அறிவுத்திருக்கோயில் சார்பாக பாராட்டும் விதமாகவும், போற்றும் விதமாகவும் மனைவிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இவ்விழா நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மனைவிகள் கணவர்களை வாழ்த்துவதும், கணவர்கள் மனைவிகளை வாழ்த்துவதும் அவர்கள் கண்ணோடு கண்ணாக காந்தப்பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சியும், கைகளை இருவரும் நாடியோடு நாடி இணைத்து ஒருவரையொருவர் வாழ்த்தினர். மனைவிகளுக்கு கணவர்கள் மலர் கொடுத்தல் நிகழ்ச்சியும் அரங்கேறியது. இதற்கான முழு ஏற்பாடுகளை அறிவுத்திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.