Wife upset over argument with husband

Advertisment

திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி பிரேமா, கடந்த 2009ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து தற்போது ஆயுதப்படையில் முதல்நிலை காவலராகப் பணியாற்றிவருகிறார். இருவரும் கே.கே. நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்துவரும் நிலையில், நேற்று (17.09.2021) தன் மகனை பிரேமா கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதில் பாண்டியன்,பிரேமா இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பிரேமா, வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த பாண்டியன், தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அவரை மீட்டு கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து கே.கே. நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.