A wife unwilling to see her husband dead; Jumping into a 100 feet well caused excitement

சாலை விபத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் இளம்பெண் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் கோபிசெட்டிபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது துறையம்பாளையம். இந்த பகுதியில் வசித்து வந்தவர் நந்தகுமார். இவர் திருப்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலக்கியா என்ற பெண்ணை நந்தகுமார் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நந்தகுமாரும் அவருடைய பாட்டி சரஸ்வதியும் திருமணம் ஒன்றுக்காக பவானி சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நிகழ்ந்த வாகன விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடற்கூறாய்வுக்கு பின்னர் நந்தகுமார் மற்றும் பாட்டி சரஸ்வதி அகியோரின் உடல்கள் துறையம்பாளையத்திலுள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கணவனை இறந்த கோலத்தில் பார்க்க மனமில்லாமல் மனைவி இலக்கியா திடீரென அருகில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Advertisment

உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக கயிறு மூலம் இளம் பெண் இலக்கியா மேலே கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து அவர் கோபி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.