/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_77.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(33). ஓட்டுநரான இவருக்கும் சென்னையைச் சேர்ந்த சிவகாமி ஸ்ரீ (30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே சிவகாமி ஸ்ரீ தனது கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால், விவாகரத்து வழங்க மனமில்லாத ராமகிருஷ்ணன் மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ எண்ணியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம், தேதி சொந்த ஊரிலிருந்து மகிழுந்தில் சென்னைக்கு சவாரி ஏற்றி வந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கைப்பேசி மூலம் மனைவி சிவகாமி ஸ்ரீ யை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்று அவர் குறிப்பிட்ட ஜனப்பன் சத்திரம் பகுதிக்கு வருவதாக சிவகாமி ஸ்ரீ தெரிவித்த நிலையில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் ராமகிருஷ்ணனை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணன் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஏற்கனவே விவாகரத்து தர மருத்துவரும் கணவன் மீது ஆத்திரத்தில் இருந்த சிவகாமி ஸ்ரீ தனது கணவன் ராமகிருஷ்ணனை கொலை செய்ய கூலிப்படையினரை ஏவி விட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சிவகாமி ஸ்ரீ மற்றும் கூலிப் படையை சேர்ந்த மதுரவாயல் நவீன்(23) கெல்வின் ராஜ்(20) சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ் ராஜ்(24) ஆகிய நான்கு பேரைக் கைது செய்து பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் நடுவன் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)