Wife stabs husband with knife out of suspicion

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் - கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மனைவி கோகிலாவிற்கு கணவன் மாரியப்பனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இது தொடராக நேற்று முன்தினமும் மாரியப்பன் கோகிலா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோகிலா வீட்டில் இருந்த கத்தியால் கணவன் மாரியப்பனை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோகிலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.