Wife pours boiling oil on sleeping husband!

கணவன் தூங்கிக்கொண்டிருந்த போது கொதிக்கும் சமையல் எண்ணெயை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(45). மீன் வியாபாரியான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி என்பரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மீன் வியாபாரம் செய்து வரும் ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக ரவி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு தினந்தோறும் மனைவி ஜெயந்தியுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம்(21.11.2024) இரவும் ரவி மனைவி செயந்தியுடன் சண்டையிட்டுள்ளார். அதன்பின்னர் ரவி தூங்கியுள்ளார். சண்டையிட்டதில் ஆத்திரமடைந்த மனைவி ஜெயந்தி மன வேதனையில் வீட்டில் இருந்த கொதிக்கும் சமையல் எண்ணெயை தூங்கிக்கொண்டிருந்த கணவர் ரவி மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி துடித்த ரவிக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த ரவி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி ஜெயந்தியை கைது செய்த சோமங்கலம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment