/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3826.jpg)
கிருஷ்ணகிரி அருகே, மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மாதரசனப்பள்ளி செம்மண்குழியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவருடைய மனைவி ரோஜா (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மனைவியின் நடத்தையில் ரஞ்சித்துக்கு சந்தேகம் இருந்து வந்ததால்,இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால்கோபித்துக்கொண்ட ரோஜா, தனது குழந்தைகளுடன் கொத்தப்பள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
மார்ச் 27 ஆம் தேதி, மாமியார் வீட்டுக்குச் சென்ற ரஞ்சித்அங்கு தனது மனைவியை சமாதானப்படுத்திமீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது குழந்தைகளை ரோஜாவின் தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரஞ்சித் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். இதில் ரோஜா நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
மனைவி இறந்ததை அடுத்து ரஞ்சித், வீட்டை பூட்டிவிட்டு சூளகிரி காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலம், உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துரஞ்சித்தை கைது செய்தனர்.இந்த சம்பவம்சூளகிரி சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)