மனைவியைக் கொலை செய்த கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த கணவன்

Wife passed away husband surrender in police station

கடலூர் மாவட்டம், ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி என்பவரின் மகன் நாகராஜன்(32). இவருக்கும், கம்மாபுரம் கிழக்கு பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி செய்து வரும் ராஜலட்சுமி(25) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை இல்லாததால் அவர்களுக்குள் தகராறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கம்மாபுரம் பழைய காவல் நிலையம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரமடைந்த நாகராஜன், மனைவி ராஜலட்சுமியை கத்தியால் தலை, பின் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவியை கொலை செய்த நாகராஜன், கையில் கத்தியுடன் கம்மாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரை கைது செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு தரப்பு உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe