Advertisment

கணவன் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த சோகம்; திருப்பத்தூரியில் பரிதாபம்!

Wife passed away in accident in front of husband

திருப்பத்தூர் அடுத்த ஏகே.மோட்டூர்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானந்தன்(50) - பழனியம்மாள்(45) தம்பதியினர். இவர்கள் இருவரும், இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து திருப்பத்தூருக்கு இறைச்சி வாங்க சென்றுள்ளனர். அப்போது அனேரி அருகே உள்ள ஆண்டி வட்டம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதேபோல் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலர் செங்கத்திற்கு எருது விடும் திருவிழாவிற்குக்காக்க மாட்டை வேனில் ஏற்றிக்கொண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்துள்ளனர்.

Advertisment

Wife passed away in accident in front of husband

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த சிவநாதனின் இருசக்கர வாகனத்தில் மீது வேன் அதிவேகமாக மோதியதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவநாதன் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் மாட்டுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

accident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe