Advertisment

கடன் வாங்கிய கணவனைவிட கடன் கொடுத்தவனே மேல்... மனைவி எடுத்த முடிவு... கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

Husband, wife, friend

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா தாலுகாவில் உள்ள முரகிபாவி கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ். கடந்த 2011ம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு தற்போது ஒரு மகள் உள்ளார். தற்போது சாந்தி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

Advertisment

இந்த நிலையில் பசவராஜ், பெலகாவி மாவட்ட கலெக்டர் ராஜப்பாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

Advertisment

அதில், அதில், ‘எனது மனைவி 2-வதாக கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ரூ.500 கடனை திரும்ப வழங்காததால் எனது மனைவியை ரமேஷ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். ரமேசுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருடைய மனைவி தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2-வது திருமணம் செய்து சவிதாவுடன் வாழ்ந்து வருகிறார். இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். என் மனைவியை என்னிடம் ஒப்படைக்கும்படி ரமேசிடம் கூறினால் அவர் ஆபாசமாக திட்டுகிறார். எனவே, என் மனைவியை மீட்டு கொடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பசவராஜ், தனது மனைவி சாந்தி மற்றும் மகளுடன் பிழைப்புக்காக பெலகாவி நகரத்துக்கு வந்தார். அப்போது பல இடங்களில் வேலை தேடினார். கிடைக்கவில்லை. பின்னர் தனியார் ஓட்டல் ஒன்றில் பசவராஜூம், சாந்தியும் வேலைக்கு சேர்ந்தனர்.

இவர்கள் வேலைக்கு சேர்ந்த ஓட்டலில் முத்தகனட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ஹூக்கேரி என்பவரும் வேலை செய்து வந்தார். ஒரே ஓட்டலில் வேலை செய்ததால் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் நண்பர்கள் ஆனார்கள். கணவருக்கு நண்பரானதால் ரமேசுடன் மனைவி சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ரமேசிடம் இருந்து பசவராஜ் ரூ.500 கடன் வாங்கினார். பல மாதங்கள் ஆகியும் வாங்கிய கடனை பசவராஜ் திரும்பி கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அடைந்த ரமேஷ், பசவராஜூவின் மனைவி சாந்தியிடம் 500 ரூபாயை திரும்பி தர முடியவில்லை அவருடன் எப்படி குடும்பம் நடத்தி, பிள்ளையை வளர்க்கப்போறீங்க என கேட்டுள்ளார். மேலும் சாந்தியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்துச் சென்றுவிட்டதாக ரமேஷ் மீது குற்றம் சாட்டி ஓட்டல் ஊழியர்களிடம் புலம்பியுள்ளார் பசவராஜ். ஓட்டல் ஊழியர்கள் ஆலோசனைப்படி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அந்த புகாரை பெறவில்லை. மேலும் கலெக்டர் அலுவலத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் ரமேசை தொடர்பு கொண்டு சாந்தியை அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை கேட்ட ரமேஷ், அவரை அவதூறாக திட்டியதுடன், தனது மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும், சாந்தியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற பசவராஜ், பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தனது மனைவியை மீட்டு தருமாறு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

debt Friend husband wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe