Wife lost their life due to dispute with husband

Advertisment

ஈரோடு அருகே குடும்பதகராறு காரணமாகஇளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா ஆசனூர் அடுத்த முதியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். பார்மசியில்டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோதி (30). இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி 2 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடிசிறுசிறு குடும்ப பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 8-ந் தேதி மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜோதி கணவருடன் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கடந்த 10-ந் தேதி சமாதானம் பேசி ஜோதியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று ஜோதி தனது கணவரிடம் சென்று தனது பாட்டி வீட்டிற்குச் சென்று வருவதாகக் கேட்டுள்ளார். அதற்கு ரங்கராஜ் பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் மன வேதனையில் இருந்த ஜோதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.