Wife incident husband by throwing stone his head while he sleeping

Advertisment

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன். 35 வயதான இவர், அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ரங்கனின் மனைவி கோகிலா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், ரங்கனுக்குகுடிப்பழக்கம் இருந்துள்ளது. காலையில் வேலைக்கு செல்லும் ரங்கன், தினமும் குடித்துவிட்டு தான் வீட்டிற்கு திரும்புவாராம்.

நாளடைவில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரங்கன் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்,மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ரங்கன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கோகிலா தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரக்கடையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற ரங்கன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர், போதையில் கோகிலாவிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென கைகலப்பாக மாறியது. இதனால் கணவன் மீது ஆத்திரமடைந்த கோகிலா, ரங்கனை கொலை செய்ய முடிவு செய்தார்.

Advertisment

அன்றிரவு 11.30 மணி அளவில், வீட்டிற்கு வெளியே இருந்து கல்லை எடுத்து வந்து, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ரங்கனின் தலையில் போட்டுள்ளார். அப்போது, ரங்கனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்த்தபோது, அங்கு அவர் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், கோகிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடிபோதைக்கு அடிமையான கணவர், திடீரென கொலை செய்யப்பட்ட சம்பவம், போத்தனுர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.