ஆத்தூரில், பாலியல் உறவுக்கு அழைத்தும் மனைவி வர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவி, குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (31). ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி பூமதி (26). இவர்களுக்கு பூவரசன் (4) என்ற ஆண் கு-ழந்தை உள்ளது. நிலாஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும் இருந்தாள்.

Advertisment

murder

கார்த்தி, ரிக் வண்டி தொழிலாளி என்பதால் அடிக்கடி வடமாநிலங்களுக்கு ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக சென்று விடுவார். மாதத்திற்கு சில நாள்கள் மட்டுமே குடும்பத்துடன் தங்கி இருப்பார். கார்த்திக்கு மது போதை பழக்கம் இருந்து வருவதால், அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் கார்த்தி வீட்டுக்கு வந்திருந்தபோதும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 18ம் தேதி இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு வெடிக்க, இருவரும் தனித்தனி அறையில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

Advertisment

நள்ளிரவில் பூமதி மற்றும் இரு குழந்தைகளும் தீயில் கருகிக் கிடந்தனர். கார்த்தி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தன் மீதான கோபத்தில் மனைவி குழந்தைகளை எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கார்த்தி அப்போது சொன்னார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த பூமதி, தன் மீதும் குழந்தைகள் மீதும் கணவனே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றதாக தன் சகோதரரிடம் கூறியுள்ளார். அவருடைய மரண வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்த அவர், இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசாரிடம் தகவல் அளித்தார்.

அந்த வீடியோவில், ''முதல்நாள் மது போதையில் வந்த கார்த்தி, என்னிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். அதற்கு அடுத்த நாளும் போதையில் இருந்த கார்த்தி, என்னை அடித்து துன்புறுத்தினார். கொஞ்சம் போதை தெளிந்த உடன், அவர் சாப்பாட்டை ஊட்டிவிடுமாறு கூறினார். இருவரும் 'ஜாலியாக' இருக்கலாம் வா என்று அழைத்தார்.

murder

ஆனால் இரு நாள்களாக அடித்து துன்புறுத்தியதில் எனக்கு உடல் வலி இருக்கிறது. இப்போது ஜாலியாக இருக்கலாம் என்றால் எப்படி நான் வர முடியும் என்று கூறி நான் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டேன். இதனால் அப்போதும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு இல்லாதவள், இந்த உலகத்தில் உயிருடன் இருக்கக் கூடாது என்று கூறி, என் மீதும், குழந்தைகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்,'' என்று கூறியிருந்தார்.

போலீசாரிடமும் இதையே மரண வாக்குமூலமாக பூமதி தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலை முயற்சி வழக்காக போலீசார் பதிவு செய்தனர். கார்த்தியை அழைத்து விசாரணை நடத்தியதில், அவரே கொலை செய்ய முயற்சித்துவிட்டு, மனைவி மீது பழி போட்டு தப்பிக்க நினைத்திருப்பது அம்பலமானது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பூமதி இன்று (செப். 22, 2018) அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில், பெண் குழந்தை நிலாஸ்ரீயும் இறந்தாள். சிறுவன் பூவரசனுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாயும், குழந்தையும் இறந்ததை அடுத்து இதனை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். கார்த்தியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.