Skip to main content

கணவருக்கு மனைவி கையால் விருது.... நெகிழ்ந்த தமிழிசை செளந்தரராஜன்!

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Tamilisai

 

கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஒரே மேடையில் விருது வழங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று என்ற நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் தன்னார்வ அமைப்பு ஒன்று விருதுகள் வழங்கும் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். அப்பொழுது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த மருத்துவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதில் தமிழிசை செளந்தரராஜனின் கணவர் செளந்தரராஜனுக்கும் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், கணவருக்கு விருதினை வழங்கினார் தமிழிசை.

 

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ''எனது கணவர் செளந்தரராஜன் எனக்கு பேராசிரியர், மற்றவர்களுக்கும் பேராசிரியர், பல சிறுநீரக நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்ததோடு மட்டுமல்லாது, பல சிறுநீரக  மருத்துவர்களை உருவாக்கியவர். அவருக்கு விருது கொடுத்தது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதையும் நானே கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது வாழ்வின் முக்கியமான தருணம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.