Wife

திருமணமான ஒரே மாதத்தில் தாலியை கழட்டி கணவனிடம் கொடுத்துவிட்டு காதலனுடன் இளம்பெண் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாராபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், அவர் வீட்டு அருகே வசிக்கும் சிவக்குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விஷயம் இளம்பெண் வீட்டுக்கு தெரிய வந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். பழனிச்சாமி என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

Advertisment

கடந்த ஒரு மாதமாக விருப்பம் இல்லாமல் வாழ்ந்து வந்த அந்த இளம்பெண், புதன்கிழமை இரவு குளியல் அறையில் தனது தாலியை கழிற்றி வைத்துவிட்டு தனது காதலன் சிவக்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை காணவில்லை என்று பல இடங்களில் தேடி பார்த்தனர். குளியல் அறையில் தாலிச் செயின் உள்ளது, பெண்ணை காணவில்லை எனபெண்ணின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அப்போதுதான் சிவக்குமார் என்பவரை தனது மனைவி காதலித்து வந்த விஷயம் பழனிச்சாமிக்கு தெரிய வந்தது.

Advertisment

இந்த நிலையில் சிவக்குமாருடன் அந்த இளம்பெண் சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் ஒமலூர் காவல்நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் சிவக்குமார் மற்றும் பழனிச்சாமி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண், காதலனுடன்தான் வாழ்வேன் என்று கூறியதையடுத்து சிவக்குமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.