Advertisment

கணவன் சாப்பிட வராததால் மனைவி தீக்குளிப்பு!

Wife fires because husband did not come to eat!

Advertisment

சென்னை அம்பத்தூரில் கணவன் சாப்பிட வராததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் மங்களபுரம் பஜனைக்கோவில் பகுதியைச் சேர்த்தவர் தேவராஜ். இவரது மனைவி மேகலா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தேவராஜ்- மேகலாவிற்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேகலா உணவு சாப்பிடுவதற்காக கணவனைஅழைத்துள்ளார். அப்பொழுது கணவன் தேவராஜ் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த மேகலா வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் வலிதாங்காமல் மேகலா அலறிய நிலையில் கணவன் தேவராஜ் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் கணவன் தேவராஜ் மற்றும் அவரது மனைவி மேகலாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Chennai hospital incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe