Wife dies within 18 months of marriage! Police investigation!

Advertisment

திருச்சி மாவட்டம், சமயபுரம் பொன்னழகி பகுதியைச் சேர்ந்தவர் அனுஷ்யா(23). கடந்த 18 மாதங்களுக்கு முன்பு அமல்ராஜ் என்ற வாலிபருடன் இவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி தன்னுடைய கணவரின் தந்தை படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அனுசியா அணிந்திருந்த நைட்டியில் தீப்பற்றி உள்ளது. இதில் சுமார் 70 சதவீத தீக்காயங்களுடன் அனுஷ்யா மீட்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அனுசுயாவின் தாய் ஏஞ்சல் ரோசாலி, காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர் கணவர் உட்பட அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.