Wife complaint against owner of dog that bit her husband's leg near Maduravoyal

சென்னை, மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் ரமேஷ் குமார்(51) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தேவி(41). இந்த நிலையில் நேற்று மாலைவீட்டின் அருகே லாவண்யா என்பவர் வளர்த்து வரும் நாட்டு நாய் ஒன்று ரமேஷ் குமாரின் இடது கால் பகுதியில் கடித்து கொதறியுள்ளது. இதனால் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Wife complaint against owner of dog that bit her husband's leg near Maduravoyal

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரமேஷுக்கு காலில்இரண்டுதையல்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது கணவரை கடித்துக் குதறிய நாயின் உரிமையாளர் லாவண்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அபாயகரமாக சுற்றித் திரியும் நாயை சென்னை மாநகராட்சி அங்கிருந்து பிடித்துச் செல்ல வேண்டும் என்றும் என ரமேஷின் மனைவி தேவிகாவல் நிலையத்தில், சென்னை மாநகராட்சியிலும் புகார் அளித்தார். இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நாயைப் பிடித்துச் சென்றனர்.

Advertisment

வளர்ப்பு நாய் கடித்து ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.