Advertisment

நண்பன் மீது பாலியல் புகார் கூறிய மனைவிக்கு நடந்த கொடூரம்!

பெருங்குடி அருகே மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் பெண்ணிற்கு நடந்த கொடூர செயலால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயகுமார் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். உதயகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் வீட்டுக்குள்ளயே மது குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதை பார்த்த மணிமேகலை கோபத்தில் தனது கணவரை திட்டியதுடன் அவரது நண்பர்களையும் திட்டியுள்ளார்.

Advertisment

issues

பின்பு வீட்டிற்குள் சென்று தனது ஆடையை மணிமேகலை மாற்றியுள்ளார். இதனை உதயகுமார் நண்பர் மாணிக்கவேல் எட்டி பார்த்து உள்ளார். இதை பார்த்த மணிமேகலை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை தனது கணவர் உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதில் உன் நண்பன் மாணிக்கவேல் நான் ஆடை மாத்தும் பொழுது எட்டி பார்க்கிறான் என்று கூறியுள்ளார். ஆனால் உதயகுமார் மனைவி சொன்னதை நம்பாமல் அவரை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அருகில் இருக்கும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் கூறிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நண்பர் மணிக்கவேல் மீது தனது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அறிந்த கணவர் உதயகுமார் கோபத்தில் இருந்ததாக கூறுகின்றனர்.

பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் ”எனக்கு எல்லாமே என் நண்பர்கள் தான், அவர்கள் எதைக்கேட்டாலும் நீ செய்துதான் ஆகவேண்டும் விருப்பம் இருந்தால் இரு இல்லை என்றால் போ” என்று கூறி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி வற்புறுத்தினார், ஆனால் புகாரை வாபஸ் வாங்க மணிமேகலை மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த மணிமேகலையை அருகில் இருந்தவர்கள் சென்னை சென்ட்ரலில் உள்ள இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்திய கணவர் உதயகுமார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள உதயகுமார் மற்றும் அவரது கொலைக்கு காரணமான அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

Friend issues wife husband Perungudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe