தினமும் வீட்டுக்கு தாமதமாக வந்த மனைவி: கொன்று வீசிய கணவன்

nagai

பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடியில் உள்ள பாண்டவையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வலிவலம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பெண்ணின் கழுத்து பகுதி துணியால் நெரிக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தனர். பின்னர் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பொதுமக்களிடம் இந்த பெண் யார் என்று விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் கிள்ளுக்குடியை அடுத்த கடலாகுடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி 57 வயதான குஞ்சுபிள்ளை என்பவருடைய மனைவி 42 வயதான மாரியம்மாள் என்பதை கண்டுபிடித்தனர். குஞ்சுபிள்ளையை போலீசார் இந்த கொலை தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் எந்தவித சோகத்தையும் காட்டாமல் எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

எந்தவித சோகத்தையும் காட்டாமல், மனைவியி பறிகொடுத்த சோகத்தை வெளிப்படுத்தாமல் இருந்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரை விசாரித்துள்ளனர். ஒரு சிலர் மாரியம்மாளின் நடவடிக்கை சரியில்லை என்று சொன்னதும், குஞ்சுபிள்ளையை தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

விசாரணையின்போது குஞ்சுபிள்ளை, தினமும் தாமதமாக வீட்டுக்கு வந்தாள். பலருடன் அவளுக்கு தொடர்பு இருந்தது. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதையடுத்து கடலாகுடியை சேர்ந்த தினேஷ் குமார் (19) என்பவரின் துணையுடன் மாரியம்மாளை கொலை செய்ய திட்டமிட்டு, சம்பவத்தன்று மாரியம்மாளின் கழுத்தை துணியால் நெரித்துக்கொலை செய்து விட்டு, உடலை பாண்டவையாற்றில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

husband murder nagai wife
இதையும் படியுங்கள்
Subscribe