Advertisment

‘பணம் கொடுக்காத கணவன்... கட்டையால் தாக்கிய மனைவி’ - போலீஸ் விசாரணை

 wife beaten husband with a stick-Police investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பிள்ளையார்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது தனசேகரன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகரன் தினசரி உழைத்துச் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் குடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர்களது 6மாத குழந்தையான நித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

அவரது மனைவி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தனசேகரன் 50 ரூபாய் மட்டும் கொடுத்து மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். 50 ரூபாய் கொண்டுகுழந்தைக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று கணவரிடம் கூடுதலாகப் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியா மது குடிப்பதற்கு மட்டும் அதிக பணம் செலவழிக்க முடிகிறது, குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை அதை சரி செய்வதற்கு 50 ரூபாய் போதுமா, இந்தப் பணத்திற்கு எந்த டாக்டர் சிகிச்சை அளிப்பார் என்று கேட்டுள்ளார்.

Advertisment

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் அவர், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் அடியைத் தாங்க முடியாத மனைவிஒரு கட்டத்தில் அருகில் கிடந்த மரக் கட்டையால் தனசேகரன் தலையில் தாக்கியுள்ளார். இதில் தனசேகர் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். தனது மனைவி மண்டையை உடைத்தது சம்பந்தமாக மணலூர் பேட்டை காவல் நிலையத்தில் தனசேகரன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

family kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe