Advertisment

சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை; கணவன் கைது

Wife attacked by putting cylinder on head; Husband arrested

தென்காசியில் மனைவி தலையில் கணவன் சிலிண்டரை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதியில் வசித்து வருபவர்கள் கணேசன்-முத்துலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் கணேசன் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் மது போதையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவி முத்துலட்சுமியுடன் சண்டையிடுவதை ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

Advertisment

Wife attacked by putting cylinder on head; Husband arrested

கணேசன் கடன் வாங்கியிருந்த நிலையில் அந்த கடனை அடைப்பதற்கு முத்துலட்சுமி அவருடைய சகோதரியிடம் பணத்தை வாங்கி உள்ளார் ஆனால் அந்தப் பணத்தையும் திருப்பி தராததால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக கணேசனும் முத்துலட்சுமியும் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மகளுடன் மாடியில் தூங்கச் சென்ற முத்துலட்சுமியின் தலையில் கணேசன் சிலிண்டரைப் போட்டு கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

incident police thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe