Skip to main content

மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
si

 

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில்  எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர்  ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

இந்தநிலையில் வசந்தியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார்.   உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். 

 

பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம்.  இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர். 

 

இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர்.  நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்.  அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும்.

 

கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார். இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த  கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது.
பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்."என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'ரூ.1 கோடி...' - சிம்புவுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

simbu corona kumar issue

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 

 

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

 


 

Next Story

''உண்மையிலேயே லைஃப்ல இது வித்தியாசமாக இருக்கு''-சிம்பு பேட்டி!

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

 "It's really different in life" - Simbu interview!

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் இன்று வெந்து தணிந்தது காடு படக்குழுவினரின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ''இந்த படம் எக்ஸ்பிரிமென்டலான படம். ரெகுலராக கமர்சியல் படங்களில் ஹீரோவோட பில்டப், சாங்ஸ் பர்பாமன்ஸ் எதுவுமே இந்த படத்தில் இல்லை. இது டோட்டலா ரொம்பவும் சீரியஸ் படம். தமிழில் இந்த மாதிரி ஒரு படம் ட்ரை பண்ணலாம்'னு கௌதமன் சார் சொன்னாரு. அது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. இன்று அதனுடைய ரெஸ்பான்ஸ் ரிலீஸ் அப்புறம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை உண்மையிலேயே கொண்டு போய் சேர்த்தது நீங்க தான். உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி. இந்த படம் ஆரம்பிக்கும் போது என்கிட்ட வேல் சார் என்ன சொன்னாரோ படம் முடியிற வரைக்கும் அதே மாதிரி இருந்தாரு. நல்லபடியா படம் ரிலீஸ் ஆச்சு. ஏன் இந்த சந்தோஷம் என்றால் நான் அவ்வளவு வலிய பார்த்து இருக்கேன். நீங்க எல்லாருமே கூட இருந்து பார்த்திருக்கிறீங்க. அவ்வளவு கஷ்டத்தில் இருந்து, சினிமாவில் ஹீரோ டோட்டலா காலி ஆகி தெருவுக்கே வந்துருவாரு, அதுக்கப்புறம் ஒரு காயினை தூக்கிப் போட்டு அப்புறம் மெதுவா மேல வர மாதிரி, உண்மையிலேயே லைஃப்ல நடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது''என்றார்.