கோவை இடையர்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (38). குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர். குடிப்பழக்கம் காரணமாக இவருக்கும் இவர் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பிரதீப்குமாரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக கோவில்பாளையம் மறு வாழ்வு மைத்தில் சேர்ந்துள்ளனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
நேற்று இரவு அவர் அங்கிருந்து தப்பி வந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்குடித்துவிட்டு, அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்து அவர் மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பின் அங்கு வந்த துடியலூர் காவல்துறையினர் பிரதீப்குமாரை எச்சரித்து காலையில் காவல் நிலையம் வந்து செல்லுமாறும், அதன்பின் மறு வாழ்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் மேலும் கோபமடைந்த பிரதீப் குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது சுடுகாடு வழியாக சென்ற அவர் சுடுகாட்டிலேயே தூக்கு போட்டுள்ளார்.
இன்று காலையில் அவ்வழியே சென்ற மக்கள் காவல் நிலையத்திற்கும், அவர் வீட்டிற்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரதீப்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி அவரது நல்லதுக்குதான் மறுவாழ்வு மையத்திற்கு போக சொன்னார்,ஆனால் இவர் இப்படி செய்துவிட்டார். அவருடன், அவரின் மனைவியின் சொல்லையும் தூக்கிலிட்டு விட்டார் என அந்த ஊர் மக்கள் புலம்பினர்.