தமிழகத்தில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக 30 மாவட்டங்களில் மதியம் வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக 30 மாவட்டங்களில் மதியம் வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் இன்று மட்டும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.