
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவருகிறது.
தமிழ்நாட்டில் தர்மபுரி, அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.அதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்,விக்கிரவாண்டி,செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்துவருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம்,தியாகதுருகம்,கச்சராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி,பாளையம்பட்டி,ராமசாமிபுரம் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்துவருகிறது.சேலத்தின் சில பகுதிகளிலும் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையிலும் வில்லிவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்துவருகிறது.
Follow Us