தமிழ்நாட்டிற்கு வரும் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகை, புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் தற்போது மழை பொழிந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் சிக்கல், வேளாங்கண்ணி, நாகூர், திருப்பூண்டி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குலமங்கலம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வேலூர், குன்னத்தூர், ஒன்னுபுரம், களம்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.