தமிழகத்தில் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பொழிந்து வரும் நிலையில், தற்பொழுது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைபொழிந்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் மழைபொழிந்து வருகிறது. அதேபோல் பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளிலும், சென்னையில்தி.நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், கோபாலபுரம், தேனாம்பேட்டை, எழும்பூர், கிண்டி, சேப்பாக்கம், மெரினா ஆகிய இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது.