Widespread rain in Chennai

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை என 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சென்னையின் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளான கிண்டி, தாம்பரம், ஆலந்தூர், பெருங்களத்தூர், கோடம்பாக்கம், முடிச்சூர், தேனாம்பேட்டை, சேலையூர், நந்தனம், செம்பாக்கம்,கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.