தமிழகத்தில் அண்மையாகவே மிதமான மழை பரவலாக பொழிந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.
சென்னையில் மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.