தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், இன்றும் தமிழகத்தில் கனமழை வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி இன்று தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நாளைக்கு கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாகப்பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வடபழனி, வேளச்சேரி, அடையாறு, தாம்பரம், போரூர், அனகாபுத்தூர்உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் அண்ணா சாலை, கோட்டூர்புரம், நந்தனம் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையானது பொழிந்து வருகிறது.