
ஆகஸ்ட் 29, 30தேதிகளில் தமிழ்நாட்டில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. அயனாவரம், சைதாப்பேட்டை, அண்ணாநகர், கொரட்டூர், பெரம்பூர், அம்பத்தூர், கோட்டூர்புரம், திநகர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பொழிந்தது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில்புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் இடியுடன்கனமழை பொழிந்தது.
Follow Us