Advertisment

தமிழகத்தில் பரவலாக கொட்டித்தீர்க்கும் மழை

Widespread rain in Tamil Nadu

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் ஓரிக்கை, செவிலிமேடு, ஏனாத்தூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதே போல் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதலைப்பட்டி, நல்லிபாளையம், வகுரம்பட்டி பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரம், பொய்கைபட்டி, கல்பாளையம்தான்பட்டி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர், மகேந்திரா சிட்டி, திம்மாவரம், பாலூர், வேண்பாக்கம், வல்லம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மதுரையில் அண்ணாநகர், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், மேலூர், அழகர் கோவில், வல்லாளப்பட்டி, மேலவளவு, தும்பைபட்டி, சிட்டம்பட்டி,வெள்ளரிப்பட்டி,திருப்பரங்குன்றம், அவனியாபுரம்,வில்லாபுரம், சிந்தாமணி,சாமநத்தம், பனையூர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. தென்காசியில் குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. சென்னையில் தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆலந்தூர், நந்தனம், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், எம்.ஆர்.சி.நகர், பட்டினம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

Advertisment

weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe