மது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசே பொறுப்பேற்க கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டதுதொடர்பான வழக்கில் கோவையை சேர்ந்த இருவர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில்சம்பந்தப்பட்ட இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நீதிபதிகள்,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தில் சொந்த மக்களுக்கு மதுபான விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆண்டிற்கு இதன்மூலம் 31 ஆயிரத்து 751 கோடி ரூபாய் வருவாய் வருகின்ற நிலையில் மற்ற பொருளாதார அடிப்படையில் ஐந்தில் ஒரு பங்கு மது விற்பனையின் மூலம்அரசு வருவாய்ஈட்டுவது வேதனையளிக்கிறது.
குடிபோதையில் விபத்துகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் கொடூரங்கள்என எண்ணற்ற சம்பவங்கள் நடக்கிறது.அதற்கெல்லாம்ஏன் அரசே பொறுப்பேற்க கூடாது என கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக வரும் ஏப்ரல்4 ஆம் தேதி தமிழ அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.