Skip to main content

'பூந்தமல்லி ஏன் பாமகவிற்கு...?'  அதிமுக நிர்வாகிகள் கொந்தளிப்பு!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

 'Why Poonthamalli to pmk...?' AIADMK executives struggle!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் (09.03.2021) இரவு விடிய விடிய நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பூந்தமல்லியை பாமகவிற்கு ஒதுக்கக்கூடாது, அதிமுகவே போட்டியிட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுகவின் கோட்டையாக இருக்கக்கூடிய கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு கொடுக்கக்கூடாது. வானதி ஸ்ரீனிவாசனை அங்கு நிறுத்தக் கூடாது என அதிமுகவின் அம்மன் அர்ஜுனனின் ஆதரவாளர்கள் நேற்று (10.03.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாமகவிற்கு பூந்தமல்லியை ஒதுக்கக்கூடாது என அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்