தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர்.

Advertisment

silambarasan T. Rajendar

அப்போது, இந்திய ஜனநாயகத்தில் இன்று தேர்தல் நடக்கிறது. எதற்கு அடுத்த மாதம் ரிசல்ட். இத்தனை கட்டமாக பிரித்து வைத்து தேர்தல் நடக்கிறது. அதற்கு வாக்கு சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்திவிட்டு போயிடலாமே. மின்னனு வாக்குப்பதிவு என்று சொல்லி, அடுத்த மாதம் ரிசல்ட் என்று சொன்னீர்கள் என்றால் நம்பமாட்டோம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

எனது மகன் சிலம்பரன் இங்கு இருந்திருந்தால் தனது உரிமையை நிலைநாட்ட வந்திருப்பார். எனது மகன் லண்டனில் இருக்கிறார். வருவதற்கு முயற்சி செய்தார். வரமுடியவில்லை. 18ஆம் தேதி தேர்தலுக்கு 15ஆம் தேதியே டிக்கெட் போட்டு வருவதாக இருந்தார். 16ஆம் தேதியும் முயற்சி செய்தார். அங்கு வேறு சில முக்கியமான காரணங்களால் வரஇயலவில்லை. போன் பண்ணி, ரொம்ப கவலைப் படுவதாக கூறினார். ஜனநாயக உரிமை, நீங்கள் போய் வாக்கு செலுத்துங்கள் என்றார். நான் போகாமல் இருப்பேனா, லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலவைர். லட்சத்தோட போய் போடுவேன் என்றேன். இவ்வாறு கூறினார்.

Advertisment