
திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி மூன்று ஆண்டுகளாக சம்பளப் பாக்கியை கேட்டு ஏன் வழக்கு தொடரவில்லை. தற்பொழுது டிடிஎஸ் தொகையை வசூலிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் மற்றொரு வழக்காக ஏன் இதை தொடர்ந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 13 தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.