அதிமுக தலைமை மழைவேண்டி தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல முக்கிய கோவில்களில்அமைச்சர்கள் தலைமையில் சிறப்பு யாகங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தஅதிமுக அமைச்சர் செல்லூர்ராஜு யாகம் குறித்த கேள்விக்கு,
மனித சக்தியை மீறி ஒரு சக்தி இருக்கிறது.மன்னர் காலத்தில் யாக பூஜைகள் நடத்தினால் மழை பெய்யும் என்பது வரலாறு. ஆன்மீக பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க, மழைக்காக கோயில்களில் யாகம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.
இன்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவிலில் நடைபெற்ற வருண பூஜையில் அவரும்,ராஜன் செல்லப்பாவும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.