தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம்மூலமாகப் பல்வேறு தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை தேவை எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை தேவை. சமூகத்தில் சூழ்ந்துள்ள தீமையை நீக்கி தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்ஆன்லைன்சூதாட்டங்கள்தடை செய்யப்பட்டநிலையில் தமிழகத்தில் தடை விதிக்க தயங்குவது ஏன்? இந்த ஆன்லைன் விளையாட்டு சிறிய தொகையைப் பரிசாகக் கொடுத்து, பெரிய தொகையிழப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார்.